Thursday, February 5, 2026
Homeகிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

கிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்ட்ட, ஆலங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை(20) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, மஹ்ரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முஹம்மது லெப்பை முபாரக் (60 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்ட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

சம்பவ தினம் மாலை 5 மணியளவில் கடைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, சென்றவர் என ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிய வந்திருப்பதாகவும், இரவு 7 மணியளவில் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து, கிண்ணியாபொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular