பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக். 36 வயதான இவர் சிறந்த பாடிபில்டர் ஆவார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்டார்.
ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கோமா நிலைக்கு செல்லப்பட்டார். நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது.
இது தொடர்பாக அவரது மனைவி அன்னா கூறுகையில்
“அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், மார்பில் கையை வைத்து நன்றாக அழுத்தி முதலுவதி செய்தேன், ஆம்புலன்ஸ் வரும்வரை அவ்வாறு செய்தேன். இலியா உடல்நலம் பெற வேண்டும் என எல்லா நேரத்திலும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவருடன் எல்லா நாட்களும் செலவழித்தேன். இரண்டு நாட்களுக்கு அவருடைய இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. ஆனால், அவருடைய மூளை செயலிழந்ததாக டாக்டர்கள் பயங்கரமான செய்தியை என்னிடம் தெரிவித்தனர்” என்றார்.
மேலும், “இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பலர் எனக்கு உதவியும் ஆதரவையும் வழங்க தயாராக உள்ளனர் என்று கூறியது, நான் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது” என்றார்.
ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒருநாளைக்கு ஏழு முறை சாப்பிடுவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2.5 கிலோ இறைச்சி மற்றும் 108 சுஷி (ஜப்பான் உணவு வகை) சாப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
6 அடி ஒரு இன்ச் உயர்ம் கொண்ட இவர் 154 கொடை கொண்டவராக இருந்தார். இவரது மார்பளவு 61 இன்ச் ஆகும்.
இவர் பள்ளிக்கூடம் படிக்கும்போது 70 கிலோ எடை இருந்தாகவும், புஷ்-அப் அவரால் எடுக்க முடியாது எனவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. பின்னர் அர்னால்டு, சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு பாடிபில்டராக ஆவதற்கு கடுயைமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.