இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்றமை பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஊடகவியலாளர் தமிழரசு தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தியா மறைமுகமாக வேறு ஒரு ஆட்சியை விரும்பிய நிலையில் தற்போது அநுரவின் ஆட்சி இலங்கைக்குள் இந்தியாவின் நிலையை இழப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்தியா கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் புதிய ஜனாதிபதியை இந்தியா தற்போது சீனாவின் ஒரு முகவராகவே நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.