விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அரிய வகை தொற்று நோய்தான் குரங்கம்மை (Monkeypox).
இந்த குரங்கம்மை பாதிப்பு 2022ஆம் ஆண்டு, முதன் முதலாக ஆபிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது.
இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (World Health Organization – WHO) தெரிவித்துள்ளது.
தற்போது ஆபிரிக்க நாடுகளில் எம்-பொக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதனால் இத் தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறித்திருந்தது.
இவ்வாறிருக்க கேரளாவின், மலப்புரத்தில் குரங்கம்மையின் ஆபத்தான திரிபு வகையான 1-பி வைரஸ், 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிகாரியொருவர் தெரிவிக்கையில், “இந்தியாவில் குரங்கம்மையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். இது மிகவும் தீவிரமானது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிக்க மாநிலங்கள் முழுமையாக தயாராக உள்ளன. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, தசைவலி, வீக்கம் போன்றவையே குரங்கம்மையின் அறிகுறிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த அறிகுறிகள் உடலில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.