கனடாவில் அடகு கடன் தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டமானது எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு கொள்வனவு செய்வதை இலகுவாக்கும் நோக்கில் இந்த புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு அடிப்படை கட்டணமாக மொத்த பெறுமதியில் 20 வீதத்தை செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 1 – 1.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் போது 20 வீதமான அடிப்படைத் தொகையை செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வீடு வாங்குவோரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், முதல் தடவையாக வீடு கொள்வனவு செய்பவருக்கு 30 ஆண்டுகள் வரையில் அடகு கடன் தவணை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்ட திருத்தங்கள் வீடு கொள்வனவு செய்பவர்களுக்கும், மில்லியன் கணக்கான மக்களுக்கும் பெரும் வசதியாக அமையும் என பிரதி பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.