Friday, November 22, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain Newsஐக்கிய மக்கள் கூட்டணியில் சர்ச்சை: தோல்விக்கான காரணம் தேடும் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் கூட்டணியில் சர்ச்சை: தோல்விக்கான காரணம் தேடும் உறுப்பினர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் ஐக்கிய மக்கள் கூட்டணியில் எழுந்துள்ள உள்ளக சர்ச்சைகள் மேலும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

“ப்ளு ப்ரின்ட்” என அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வெளியீடு தான் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு முதன்மை காரணம் என தெரிவித்து ஒரு குழுவினர் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

விசேடமாக, அந்த விஞ்ஞாபனத்தை தயாரித்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம் மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த மூவரும் அவரவர் ஆசனங்களிலும் இருந்தும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹர்ஷன ராஜகருணா, காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்டோர் இந்த நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்பதாக அறியக் கிடைத்துள்ளது.

மேலும், அந்த மூவரைத் தவிர, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த ஏனையவர்களை நீக்க வேண்டும் என லக்ஷ்மன் பொன்சேகா கடும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments