Thursday, November 21, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsEuropeஐரோப்பிய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மார்பர்க் வைரஸ்: ஜேர்மனியில் மூடப்பட்ட தொடருந்து நிலையம் | A...

ஐரோப்பிய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மார்பர்க் வைரஸ்: ஜேர்மனியில் மூடப்பட்ட தொடருந்து நிலையம் | A Deadly Marburg Virus That Bleeds Into The Eyes

கண்களில் இரத்தம் வழியும் ஆபத்தான மார்பர்க் வைரஸ் காரணமாக ஜேர்மனியின் முக்கிய தொடருந்து நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நோய்தொற்றினால் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகள் தொடருந்து நிலையத்தில் அடையாளம் காணப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவசர சேவை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் தொடருந்து நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வேகமாக பரவும் ஆபத்து கொண்ட எபோலா போன்ற இந்த தொற்றுநோய் தற்போது ஐரோப்பா நாடுகளிலும் வியாபிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும், ஆபத்தான மார்பர்க் வைரஸ் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மார்பர்க் வைரஸ் பாதிப்பினால் இதுவரை ஐரோப்பிய நாடுகளில் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments