Wednesday, October 16, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsAmericaஈரானின் அணு தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஆதரிக்க மாட்டோம்.. ஜோ பைடன் ஆவேசம்

ஈரானின் அணு தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஆதரிக்க மாட்டோம்.. ஜோ பைடன் ஆவேசம்

வாஷிங்டன்: ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. எனினும், ஈரானின் அணு தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்து ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கானோரை பணையக்கைதிகளாவும் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.

இதனால், கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டும் வரை ஓய மாட்டோம் என தாக்குதலை முன்னெடுத்தது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான இந்த மோதல் ஓராண்டு காலமாக நீடித்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வரும் லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்தது. ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதம் இருந்த வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி உள்ளனர். தற்போது இந்த மோதல் என்பது இஸ்ரேல் – ஈரான் மோதலாக மாறியுள்ளது.

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரூல்லாவை இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொன்றது. இதனால் பொங்கி எழுந்துள்ள ஈரான், இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் பெரிய அளவு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட அளவுக்கு இஸ்ரேல் சேதத்தை எதிர்கொண்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளதால் மத்திய கிழக்கில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ஈரானில் உள்ள அணு கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஜோ பைடன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், “இஸ்ரேல் என்ன செய்யப்போகிறது என்பது பற்றி அவர்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்துவோம்.

ஒப்பீடு ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளையில், கண் மூடித்தனமாக இன்றி கணக்கிட்டுத்தான் இந்த தாக்குதலை நடத்த வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த ஜோ பைடன், இல்லை என்றார். ஈரான் மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச இருப்பதாகவும் கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசிய போது, கொடுக்கப்பட்ட பதிலடியை விட இந்த முறை வலுவான பதிலடியை கொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த முறை ஈரானின் அணு தளங்கள் மீது அல்லது எண்ணெய் வளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று சர்வதேச வல்லுனர்கள் கூறியுள்ளனர். எனவே இஸ்ரேலின் பதிலடி பிராந்திய மோதலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இந்த விவகாரத்தை அமெரிக்கா கையாள்வதாகவும் கூறப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments