Friday, May 2, 2025
HomeMain NewsAmericaபசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க கடற்படை தளபதி இலங்கைக்கு விஜயம்

பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க கடற்படை தளபதி இலங்கைக்கு விஜயம்

பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உயர் மட்ட கடற்படை அதிகாரியொருவரின் வருகையாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, அட்மிரல் கோஹ்லர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த, நெகிழ்ச்சியான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான வலுவான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவார் என அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள், கடல்சார் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பதிலளிப்பு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments