முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் குடியியல் மீளமைக்கப்பட்டால் புதிய கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்சியின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
“தான் சில நிபுணர்களை சந்தித்து குடியியல் உரிமைகளை கேட்டுள்ளதாகவும் தனக்கு குடியியல் வழங்கப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக தனக்கு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டதாகவும் இருப்பினும் தான் வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் தன்னால் வாக்களிக்க முடியாமல் போனதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.