தென் கொரியாவுடனான வீதி மற்றும் ரயில் பாதைகளை துண்டிப்பதாகவும் எல்லையில் உள்ள பகுதிகளை பல படுத்துவதாகவும் வடகொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவுடன் இணைக்கப்பட்ட வீதிகள், ரயில் பாதைகள் நேற்று முதல் உத்தியோகப்பூர்வமாக துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா நடத்தும் போர் பயிற்சிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என வடகொரியாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவமயமாக்கப்பட்ட பகுதியை மேற்பார்வையிட அமெரிக்கா தலைமையிலான ஐ.நா.கட்டளைக்கு தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வட கொரியா ஏற்கனவே இந்த ஆண்டு பல மாதங்களாக இராணுவமயமாக்கப்பட்ட எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்து வருவதாக தென் கொரியாவின் இராணுவம் கூறியது.
கொரிய தீபகற்பத்தில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ச்சியான ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.