டேவிட் ஸ்டான்லி ஸ்டீல். இங்கிலாந்து அணிக்காக டெஸ்டுக்கள் விளையாடிய இவர் அந்த அணிக்காக பங்கு பெற்றது ஒரே ஒரு ஒரு நாள் ஆட்டத்தில் மட்டும்.ஒரு வருடம் டெஸ்ட்டுக்கள் ஆடிய இவர் 8 டெஸ்டுக்களில் எடுத்த ரன்கள் 673. சராசரி 42.06 ரன்கள்.
1 சதம் (106),5 அரை சதங்கள்,7 கேட்ச்சுக்கள் அறிமுக டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக. லார்ட்ஸ் மைதானத்தில் . ஜூலை,1975.பல கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட்டுக்கள் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறும் வயதில், டேவிட் ஸ்டீல் தனது அறிமுக டெஸ்டை 33 வது வயதில் துவக்கினார்.
முதல் டெஸ்டில் தாம்ப்சன், லீல்லீ பந்துக்களை பவுண்டரி கோட்டை தாண்டி செலுத்தி முத்திரை பதித்தார்.அடுத்து தொடர்ந்த மேற்கு இந்திய தீவுக்கள் கிரிக்கெட் அணியின் வெகு வேக பந்து வீச்சாளர்கள் ஆன ராபர்ட்ஸ், ஹோல்டர், டேனியல், ஹோல்டிங்ஹ் வீரர்களின் பந்துக்களை தைரியமாக எதிர் கொண்டு ஆடி ஒரு டெஸ்டில் சதம் எடுத்தார். இவரது கடைசி டெஸ்ட் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக. ஓவல் மைதானம். 1976, ஆகஸ்ட் மாதத்தில்.மேற்கு இந்திய தீவுக்கள் அணி வென்றது. 231 ரன்கள் வித்தியாசத்தில்.இந்த டெஸ்டில் இரண்டு சதங்கள். இரண்டும் இரட்டை சதங்கள்.மேற்கு இந்தியத்தீவுக்கள் அணி வீரர் வீவியன் ரிச்சர்ட்ஸ் 291. இங்கிலாந்து வீரர் டென்னிஸ் அமிஸ் 203. மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர் மைகேல் ஹோல்டிங்ஹ் எடுத்தது விக்கெட்டுக்கள் 14.
டேவிட் ஸ்டீல் இரண்டு அணிகளுக்கு எதிராக மட்டும் தான் டெஸ்டுக்கள் விளையாடினார்.ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டெஸ்டுக்கள்.மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக 5 டெஸ்டுக்கள்.இவர் முதல் தர கிரிக்கெட் பெட்போர்ட் ஷயர், டெர்பிஷயர், லெய்ஸ்ஸ்டர்ஷயர், நோர்த்தம்படன்ஷயர் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர். 500 முதல் தர ஆட்டங்களில் இவர் எடுத்த ரன்கள் 22346. 30 சதங்கள். 117 அரை சதங்கள். பிடித்த கேட்சுக்கள் 546.
1958- 59 ஆஷஸ் தொடர். ஆஸ்திரேலிய மண்ணில்.பிரிஸ்பேன் டெஸ்டில் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் ட்ரெவோர் பெய்லி ஆடிய கடைசி டெஸ்ட்.இது தான் முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஆஸ்திரேலியாவில் டி வி யில் ஒளி பரப்பு செய்யப்பட்டது. இந்த டெஸ்டில் ட்ரெவோர் பெய்லி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் 27. பவுண்டரிகள் 2. எதிர் கொண்ட பந்துக்கள் 116. இரண்டாவது இன்னிங்சில் எடுத்த ரன்கள் 68. பவுண்டரிகள் 4. எதிர் கொண்ட பந்து க்கள் 427. ட்ரெவோர் பெய்லி நின்று நிதானமாக பந்துக்களை தடுத்து ஆடுவதில் (playing defense) சூரர் என்பதற்கு இந்த டெஸ்டில் அவர் ஆடிய ஆட்டங்கள் ஒரு உதாரணம்.இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றனர்.
ட்ரெவோர் பெய்லியின் கடைசி டெஸ்ட் ஆட்டம், அந்த தொடரின் கடைசி மற்றும் 5 வது டெஸ்ட் ஆகும். பிப்ரவரி, 1959. மெல்போர்ன் மைதானத்தில்.இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியது. அவரது கடைசி டெஸ்டில் பெய்லி மூன்று 0 களுக்கு அதிபதி ஆனார். ஆம். இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங்கில் ரன் எதுவும் எடுக்க வில்லை. எடுத்தது பூஜ்ஜியம் (0) பேர் ( pair ) ஒரு இன்னிங்சில் மட்டும் பவுலிங் செய்தார். அதிலும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை . (0) விக்கெட்.இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 – 0 என்ற கணக்கில் அஷஸ் தொடரை வென்றது. இவரது அறிமுக டெஸ்ட் ஜூன், 1949ல் லீட்ஸ் மைதானத்தில் நியூஜிலான்து அணிக்கு எதிராக. ட்ரெவோர் பெய்லி எடுத்த ரன்கள் 12. பேட்டிங் ஆடியது ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும்.முதல் இன்னிங்சில் பவுலிங்கில் முத்திரை பதித்தார்.
32.3 ஓவர்கள் 6. மெய்டன் 118 ரன்கள் 6 விக்கெட்டுக்கள் ஆட்டம் டிராவில் முடிந்தது.முதல் தர கிரிக்கெட் விளையாடியது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், எஸ்ஸக்ஸ் ட்ரெவோர் பெய்லி ஆடிய முதல் தர ஆட்டங்கள் 682. ரன்கள் 28641. அதிக பட்சம் 205. சதங்கள் 28. அரை சதங்கள் 150. கேட்சுக்கள் 426.ட்ரெவோர் பெய்லி ஆடிய டெஸ்ட் ஆட்டங்கள் 61. ரன்கள் 2290. அதிக பட்சம் 134*. சதம் 1. அரை சதங்கள் 10. கேட்சுக்கள் 32. வீழ்த்திய விக்கெட்டுக்கள். முதல் தர ஆட்டங்கள் 2082 அதிக பட்சம் ஒரு இன்னிங்சில் 10 / 90 5 விக்கெட்டுக்கள் 110 முறை 10 விக்கெட்டுக்கள் 13 முறை டெஸ்ட் ஆட்டங்கள் 132 அதிக பட்சம் ஒரு இன்னிங்சில் 7 / 34 5 விக்கெட்டுக்கள் 5 முறை 10 விக்கெட்டுக்கள் 1 முறை முதல் தர கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகள். 1000 ரன்களுக்கு மேல் 18 முறையும், 100 விக்கெடுக்களுக்கு மேல் 9 முறையும் எடுத்துள்ளார். 8 முறை பேட்டிங் , பவுலிங்கில் இரண்டும் சேர்த்தும் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக பேட்டிங்ஹ், பவுலிங் இரண்டிலும் ஒரே டெஸ்டில்.துவக்க வீரராக திகழ்ந்துள்ளார் சில டெஸ்டுக்களில். இவர் ஒரு சிறந்த கால்பந்து வீரரும் கூட. பல்கலைக் கழகத்தில் பயிலும் பொழுது கிரிக்கெட் உடன். கால் பந்தாட்டத்திலும் பல்கலைக் கழக அணிகளில் ஆடி அசத்தியுள்ளார். இவர் வர்ணனையாளரும் ஆகவும் பணி புரிந்துள்ளார்.கிரிக்கெட் பற்றி எழுதி வந்த இவர், புத்தகங்கள் கூட எழுதியுள்ளார், எழுத்தாளராக. 6 கேப்டன் களின் தலைமையில் விளையடியுள்ளார். உப தலைவராக இருந்த இவருக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை கேப்டனாக வழி நடத்தும் வாய்ப்பு கிட்டவில்லை.
ட்ரெவோர் பெய்லி ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுக்கள், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவர்.இவர் 2011, பிப்ரவரியில் மறைந்த பொழுது இவர் வயது 87 வருடங்களும், சில தினங்களும் முடிந்து இருந்தது. குறிப்பிட்ட காலத்திற்கு இவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக தொடர்ந்து விளங்கினார்.ட்ரூமன், அலெக் பெட்சர், ஸ்டேதம், டைசன் ஆகிய தலை சிறந்த வேக பந்து வீச்சாளர் களுடன் ஜோடியாக பவுலிங் செய்துள்ளார்.