அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை வியாழக்கிழமை ஜேர்மனிக்கு அரசு முறைப்பயணமாக வர இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், பெர்லினின் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸையும், ஜேர்மன் ஜனாதிபதியான ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்யெய்ன்மெயரையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
அதற்காக அவர் நாளை ஜேர்மனிக்கு பயணிப்பதாக இருந்தது.
ஆனால், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை மில்ட்டன் என்னும் சூறாவளி நெருங்குகிறது. ஆகவே, புயல் காரணமாக ஜோ பைடனின் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சந்திப்பு பின்னொரு திகதியில் நடைபெறும் என ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.