சுவிட்சர்லாந்தில், சொந்த மகனைக் கடத்தி வெளிநாடொன்றிற்குக் கொண்டு சென்ற ஒருவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில், தனது 5 வயது மகனைக் கடத்தி, அவனுடன் மொராக்கோ நாட்டுக்குச் சென்றுவிட்டார் சுவிட்சர்லாந்து நாட்டவர் ஒருவர்.
நீதிமன்றம் அந்தச் சிறுவனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவனது தாய்க்குக் கொடுத்துள்ள நிலையிலும், அவனைக் கடத்தி, மொராக்கோ நாட்டிலுள்ள Marrakech என்னுமிடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார் அவர்.
ஜனவரி மாதம் அவர் ஜெனீவாவுக்குத் திரும்பினார். ஆனால், அவருடன் அவரது மகன் இல்லை. அவரை பொலிசார் சிறையில் அடைத்துள்ளார்கள்.
பின்னர் குழந்தை மொராக்கோ அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டான். என்றாலும், அவனது பாஸ்போர்ட் தொலைந்துபோனதால், அவனை சுவிட்சர்லாந்துக்குக் கொண்டு வர முடியாத நிலை உருவாகியுள்ளது.