தனிப்பட்ட ஒரு நபரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இன்று தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுள்ளது என்று யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோரால் தான் கட்சி கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்காமை, தலைமை எடுக்கும் முடிவுகளை ஏற்காமை உள்ளிட்ட தாங்கள் தான் என்ற எதேச்சதிகார போக்கு இவர்கள் இருவரிடமும் உண்டு என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலின் பின்னணி குறித்தும் விரிவுரையாளர் இளம்பிறையன் தெளிவுபடுத்தினார்.