அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்ப் கொலராடோ மாகாணம் அரோரா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்தோரால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் , ஆக்கிரமிக்கப்பட்ட அமெரிக்கா என அழைக்கப்படுகிறது என்றார்.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் அமெரிக்கர்கள், பாதுப்புப்படையினர், பொலிசாரை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.