Tuesday, January 28, 2025
HomeMain NewsEuropeசில அழகுப்பொருட்களால் ஆபத்து: எச்சரிக்கும் சுவிஸ் ஆய்வு முடிவுகள்

சில அழகுப்பொருட்களால் ஆபத்து: எச்சரிக்கும் சுவிஸ் ஆய்வு முடிவுகள்

நாம் அன்றாடம் பயன்படுத்திம் சில அழகுப்பொருட்கள், உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக சுவிஸ் ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளன, roll-on deodorant, spray deodorant, hand lotion, perfume மற்றும் dry shampoo hair spray ஆகிய அழகுப்பொருட்கள் தொடர்பில், சுவிட்சர்லாந்தின் Federal Institute of Technology Lausanne (EFPL) நிறுவன அறிவியலாளர்கள் இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுவந்துள்ளார்கள்.

மூடிய அறைகளுக்குள் இந்த ஸ்பிரே போன்ற அழகுப்பொருட்களைப் பயன்படுத்தும்போதும், அவை ஓசோனுடன் சேரும்போதும், அவை சில ரசாயனங்களை வெளியிடுவதாகவும், அந்த ரசாயனங்களின் துகள்கள் நமது நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்வதாகவும் அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

என்றாலும், இந்த துகள்களை தினமும் சுவாசிப்பது எப்படி நமது உடல் நலனை பாதிக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்.

அதை நிரூபிக்க மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள நிலையில், ரசாயன அழகுப் பொருட்களை சார்ந்திருப்பதைக் குறைத்துவிட்டு, அவற்றிற்கு மாற்றாக, இயற்கை உட்பொருட்களைப் பயன்படுத்துவதும், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு, இந்த பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நன்மை பயக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments