நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ‘ரகு தாத்தா’ படம் வெளிவந்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது அவரது கவனத்தை பாலிவுட் பக்கமும் திருப்பியுள்ளார்.
அந்த வகையில், அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித்திற்கே டஃப் கொடுக்கும் வகையில், அபிதாபியில் கார் ரேசில் கலந்து கொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ,
https://twitter.com/i/status/1844743573704515971