வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வட கொரிய தனது எல்லையில் துருப்புக்களை நிலை நிறுத்தியுள்ளது.
இரு நாடுகளை இணைக்கும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியை வடகொரியா இராணுவம் தகர்க்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் அதற்கு உரையாற்றுகையில் பதிலளிக்க தாம் முழுமையாக தயாராக இருப்பதாகவும் தென் கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.
தென்கொரியா அரசாங்கம் தலைநகர் மீது ட்ரோன்களை பறக்கவிட்டதாக வட கொரியா குற்றம் சாட்டி வரும் நிலையில் சமீபத்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகொரியாவின் இவ்வாறான ஆத்திரமூட்டல் நடவடிக்கையை எதிர்கொள்ளவும் துப்பாக்கிச் சூடு நடத்த கூட தாம் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும் தென் கொரியாவின் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
வட கொரியாவின் நடவடிக்கைகளை கண்டித்த தென்கொரிய அரசாங்கம், வடகொரியாவிற்குள் ட்ரோன்களை பறக்கவிட்டமைக்கு இதுவரை பொறுப்பு கூறவோ மறுக்கவோ இல்லை.
சமீபத்திய நாட்களில் தலைநகரின் தென்கொரிய இராணுவத்தின் ட்ரோன்கள் மூன்று முறை ஊடுருவியதாக வடகொரியா குற்றம் சாட்டியிருந்தது
இந்த நடவடிக்கையை தென்கொரியா நிறுத்தாவிட்டால் கொடூரமான பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் வடகொரியா தலைவர் கிங் ஜோங் உன்னின் சகோதரி எச்சரித்துள்ளார்.