சமூக வலைதளங்களில் தன்னைக் குறித்து அவதூறு பரப்புவதாக முன்னாள் மனைவி அளித்த புகாரில் பிரபல நடிகர் பாலாவை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை பொலிசார் கைது செய்தனர்.
பிரபல தமிழ் டைரக்டர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா. தமிழில் கலிங்கா, வீரம் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் களபம், புதிய முகம், புலி முருகன், முசாபிர், லூசிபர் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு பிரபல மலையாள பாடகியான அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எலிசபெத் என்பவரை 2வது திருமணம் செய்தார். பின்னர் அவரையும் பாலா பிரிந்து விட்டார். இந்தநிலையில் தனக்கும், மகளுக்கும் எதிராக பாலா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பவதாக அமிர்தா சுரேஷ் கொச்சி பொலிசில் புகார் செய்தார்.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை கடவந்திரா பொலிஸ், நடிகர் பாலாவை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. பின்னர் விசாரணைக்காக பொலிசார் அவரை கடவந்திரா பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலையில் பாலாவை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் தீர்மானித்து உள்ளனர்.