மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தநிலையில் 111 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதற்கமைய நியூசிலாந்து மகளிர் அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளதுடன் இந்திய மகளிர் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.