Monday, May 12, 2025
HomeMain NewsUKமாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு..!

மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு..!

பிரபல ஒன் டைரக்ஷன் (ONE DIRECTION) இசைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், பாடகருமான லியாம் பெய்ன், விடுதி ஒன்றின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

2010இல் ஒன் டைரக்ஷன் குழுவில் இணைந்து முன்னணி பாடகராகத் திகழ்ந்தார். பின் 2016இல் இசைக்குழு கலைக்கப்பட்ட பின் தனிப் பாடகராக வலம் வந்தார்.

இந்த நிலையில், 31 வயதான பாடகர் லியாம், பலேர்மோ மாவட்டத்தில் உள்ள விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் கீழே விழுந்ததும், காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் பெய்னின் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இளம் பாடகர் லியம் பெய்ன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments