ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் 2 நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்படவுள்ளார்.
கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், ஹட்டன் பிரதேசத்திலுள்ள ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாவிற்கு இந்த இரு பொருட்களையும் விற்பனை செய்ய வந்துள்ளார்.
இந்த ஒல்லாந்தர் காலத்துப் பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து சந்தேக நபர் எதுவும் கூறவில்லை எனவும், தொல்பொருள் திணைக்களத்திற்கு ஹட்டன் தலைமையக காவல் துறை பரிசோதகர் தெரிவித்தார்.
அத்தோடு, தொல்பொருள் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்காகத் தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய நிறுவனம்” பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும்.
இந்நாணயத்தில் 1732ஆம் ஆண்டு எனப் பொறிக்கப்பட்டுள்ளது.