Saturday, November 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsIndiaகூட்டணிக்கு காத்திருக்கும் எடப்பாடி வாழ்த்துச் சொல்லி விஜய்க்கு வலை வீசுவதன் பின்னணி!

கூட்டணிக்கு காத்திருக்கும் எடப்பாடி வாழ்த்துச் சொல்லி விஜய்க்கு வலை வீசுவதன் பின்னணி!

நடிகர் விஜயின் கட்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து சிக்னல் கொடுத்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் சிக்னலுக்காக காத்திருக்கிறார். ‘எல்லாம் எதிர்கால தேர்தல் கூட்டணிக் கணக்கு தான்’ என்கின்றனர், கட்சியினர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அணிகள் தயாராகி வருகின்றன.

வெற்றிக்கூட்டணி கை நழுவி விடாமல் இருக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பகீரத பிரயத்தனம் செய்கிறார். அவ்வப்போது முரண்டு பிடிக்கும் வி.சி.க., கம்யூ., கட்சிகளை தாஜா செய்தும், தட்டிக் கொடுத்தும் கூட்டணியை தக்க வைக்க முயற்சிக்கிறார்.

அதே வேளையில், எப்படியாவது தி.மு.க., கூட்டணியில் இருந்து சில கட்சிகளை தட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று இ.பி.எஸ்., கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளார்.

அவ்வப்போது வி.சி.க., கம்யூ., காங்கிரஸ் கட்சிகளுக்கு நுால் விட்டுப் பார்க்கிறார். இத்தகைய சூழலில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதுக்கட்சி, தமிழக அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

முன்னணி நடிகரான விஜய்க்கு, எல்லாத்தரப்பிலும் ரசிகர்கள் அதிகம். அவரால், இரு முக்கிய கூட்டணிகளுக்கும் சேதாரம் ஏற்படும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

அப்பப்பட்ட சூழலில் வரும் 27ம் தேதி கட்சி மாநாட்டை விஜய் நடத்துகிறார். அதற்கான வேலைகளில் கட்சியினர் பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கும் வேளையில் அரசியல் தலைவர்கள் பலரும் விஜய் மாநாடு பற்றிய ஊடகங்களில் தொடர்ந்து பேசி, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் ஸ்டார் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் விஜய் அரசியல் பிரவேசம் பற்றி பேசி இருந்தாலும், நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான இ.பி.எஸ்., பேசி இருப்பது தான் இன்றைய தமிழக அரசியலின் ஹைலைட்டாக மாறி இருக்கிறது.

சேலத்தில் அவர் பேட்டி அளிக்கையில் வழக்கமான அரசியல் கேள்விகளுக்கு மத்தியில் நிருபர் ஒருவரிடம் இருந்து நடிகர் விஜயின் த.வெ.க., முதல் மாநாடு பற்றிய கேள்வி எழுகிறது. அதற்கு இ.பி.எஸ்., அளித்த பதில் வருமாறு;

திரையுலகில் முன்னணி நடிகராக அவர் விளங்கி வருகிறார். அவருக்கு ஒன்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரும் மக்களுக்கு பொது சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார்.

அவரது முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். விஜய் பொதுக்கூட்டத்துக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க., போராட்டங்களுக்கும் தி.மு.க., அரசு அனுமதி மறுத்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில் அதிருப்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தற்போது இடதுசாரிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். 2026ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க., தலைமையில் பலமான கூட்டணி அமையும்.இவ்வாறு இ.பி.எஸ்., கூறி உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments