கனடாவின் ஆளும் லிபரல் கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலகுமாறு மறைமுக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
பொதுமக்களும் கட்சியின் பிரதிநிதிகளும் ஆங்காங்கே மறைமுகமாக இதனை வெளிப்படுத்தி வந்தனர்.
எவ்வாறு எனினும் லிபரல் கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் இன்றைய தினம் பிரதமரிடம் நேரடியாகவே பதவி விலகுமாறு கோரி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய அரசியல் வட்டார தகவல்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன.
குறிப்பிடத்தக்களவு லிபரல் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரிடம் பதவியை துறக்குமாறு இன்று கோரிக்கையை விடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், அமைச்சர்கள் மட்டத்தில் பிரதமருக்கு பூரண ஆதரவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பிரதமரை ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை, பதவி துறக்கும் எண்ணம் பற்றி கனடிய பிரதமர் எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.