Wednesday, April 30, 2025
HomeMain NewsAmericaஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானிய தொழிற்கட்சியின் தலையீடு : டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு..!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானிய தொழிற்கட்சியின் தலையீடு : டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு..!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தொழிற்கட்சியின் தலையீடு உள்ளதாக குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு, அமெரிக்காவிலுள்ள பிரித்தானிய தொழிற்கட்சியினர் செயற்பாட்டாளர்கள் ஆதரவளித்து வரும் நிலையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொழிற்கட்சியுடனான ஜனநாயகக் கட்சியின் உறவுகளைச் சட்டவிரோத வெளிநாட்டு உதவி என டொனால்ட் ட்ரம்ப் பிரசாரத்தில் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டினர் அமெரிக்கத் தேர்தல்களில் பிரசாரம் செய்ய முடியும்.

எனினும் அவர்களுக்குப் பணம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு முன்னதாகவும் உதவியுள்ளனர்.

எனினும் தற்போதைய இந்த செயற்பாடானது எதிர்காலத்தில் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் டொனால்ட் ட்ரம்புக்கு தலையிடியை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர் கருதுகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments