உகாண்டாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
உகாண்டா தலைநகர் கம்பாலா பகுதியில் எரிபொருள் தாங்கியை ஏற்றிச் சென்ற பாரவூர்தி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பாரவூர்தியில் இருந்த எரிபொருள் தாங்கி கவிழ்ந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எரிபொருளைச் சேகரிப்பதற்காக பாரவூர்தி முன் குவிந்தனர்.
அப்போது திடீரென எரிபொருள் பாரவூர்தி தீப்பிடித்து எரிந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.