Thursday, May 22, 2025
HomeMain NewsSri Lankaகளனி பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவன் தொடர்பிலான விவரங்கள்..!

களனி பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவன் தொடர்பிலான விவரங்கள்..!

களனி பல்கலைக்கழக மாணவர் விடுதியின் 4ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவன் தொடர்பிலான விவரங்கள் வெளியாகியுள்ளன.

களனி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கியல் துறையின் நான்காம் வருட மாணவனான பிரின்ஸ் ராஜு பண்டார, விடுதியின் 4ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (22) மாணவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுபான விருந்து நடைபெற்றதாகவும், குறித்த மாணவன் அதிகமாக மது அருந்தியதால் அறையின் ஜன்னல் பகுதியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற அறையை நீதவான் பரிசோதிக்க உள்ளதாகவும், அரசாங்க பரிசோதகர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் உரிய இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments