யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்..!

கோப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
ஆதரவாளர்கள் அந்தத் தாக்குதலை எதிர்த்தனர்.
இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு, சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles