அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிடியாவ வனப்பகுதியில், புலிகள் பயன்படுத்தினர் என சந்தேகிக்கப்படும் சினைப்பர் வகை துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த ஆயுதங்கள் மரப்பொந்து ஒன்றின் உள்ளே நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்டகாலமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அவை எவ்வாறு அங்கு கொண்டு வரப்பட்டன, யாரால் மறைத்து வைக்கப்பட்டன என்பது தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
