Friday, November 1, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeHealthமார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்..!

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்..!

உடல் எடை அதிகரிப்பு காரணமாக நாம் பலதரப்பட்ட நோய் அபாயங்களைச் சந்திக்கிறோம். ஆனால் இதில் மார்பக புற்றுநோயும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மார்பக புற்றுநோய்க்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இதை தவிர்க்க உடல் பருமனை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

எனவே தினந்தோறும் உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

மோசமான வாழ்க்கை முறை

ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணங்களால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது. பெண்கள் பலரும் வீட்டு உணவை தவிர்த்து வெளியில் நொறுக்குத் தீனிகளுக்கும், துரித உணவுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடல் செயல்பாடுகளுடன், ஆரோக்கியமான உணவுமுறையை கையாள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

ஹார்மோன் சிகிச்சை

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் ஹார்மோன் சிகிச்சையும் அடங்கும். இதில் ஒரு பெண் நீண்ட காலமாக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.

ஹார்மோன் சிகிச்சை மிகவும் பொதுவானதாகி விட்டாலும், இது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

கருத்தரிக்கும் வயதை அதிகரிப்பது

சரியான நேரத்தில் கருத்தரிப்பதன் மூலம், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். ஆனால், இன்று பெண்கள் பலரும் 30-32 வயதிற்குப் பிறகு கர்ப்பத்தைத் திட்டமிடுகின்றனர். இது மார்பக புற்றுநோய் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.

குறுகிய காலத்தில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுதல்

பெண்கள் சிலருக்கு சிறு வயதிலேயே மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு குறுகிய காலத்திற்கு உணவளிப்பதாகும். பிரசவத்திற்கு பிறகு குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைத் தவிர்க்கலாம்.

மரபணு காரணங்கள்

பல சமயங்களில், பெற்றோருக்கு குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அது குழந்தைகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மோசமான வாழ்க்கை முறையை சரி செய்வதன் மூலமே மூலம் மார்பக புற்றுநோயை பெரிய அளவில் தடுக்கலாம். எனினும், மரபணு காரணமாக ஏற்படுவது இந்த பாதிப்பை சற்று கடினமாக்குகிறது.

இவை அனைத்தும் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான காரணிகளாகும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும், சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments