கனடாவின் மார்கம் நகரில் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவடைந்தன.
McCowan Road – 14th Avenue சந்திப்புக்கு அருகாமையில் பார்த்தீபன் பஞ்சலிங்கம் கடந்த மாதம் 19ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக வந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போது அவர் உயிரிழந்துவிட்டார்..
அவரின் வீட்டு வாசலில் வைத்து அவர் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்.
இலங்கையில் மயிலிட்டியை பிறப்பிடமாக கொண்ட 44 வயதான இவரது கொலை ஒரு இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது. மிகுந்த பொலிஸ் பாதுகாப்புடன் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தகொலை சம்பவம் தொடர்பில் புலனாய்வாளர்கள் குறைந்தது ஒரு சந்தேக நபரை தேடி வருகின்றனர். எனினும், சந்தேகநபர் குறித்த நபர்களின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் வாகனம் குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிட்டனர். இதன்படி, வெள்ளை நிற GMC Envoy வாகனம் ஒன்றை யோர்க் பிராந்திய பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த விபரம் அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.