Sunday, May 25, 2025
HomeMain NewsSri Lankaசிறீதரனை தோற்கடிக்க ச.குமாரோடு சேர்ந்து சுமா போடும் புதுத்திட்டம்!

சிறீதரனை தோற்கடிக்க ச.குமாரோடு சேர்ந்து சுமா போடும் புதுத்திட்டம்!

கடந்த மாதம் 21ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள இரகசிய இடத்தில் ச.குமாரை சந்தித்த சுமா, யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் சிறீதரனுக்கு பெருகும் ஆதரவு அலையை உடைத்து தோற்கடிக்க புது பிளான் ஒன்றை போட்டிருக்கிறார்.

சிறீதரன் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தார் என்று ஒரு புரளியை கிளப்பி விட்டும் அது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை என்பதால், சிறீதரன் பார் பொமிட் எடுத்தார் என்று மதுவரி திணைக்களம் வெளியிடுவது போல போலி கடிதம் ஒன்றை உருவாக்கி சந்திரகுமாரின் கட்சி ஆதரவாளர்கள் மூலம் சமூகவலைத்தளங்களில் வெளியிட வைத்து மக்களை குழப்பி கிளிநொச்சியில் சிறீதரனுக்கு ஆதரவை குறைப்பது என்று திட்டம் தீட்டியுள்ளார்கள்.

இந்த சதித்திட்டத்தை தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன் செய்வது என்றும் பிளான் போட்டிருக்கிறார்கள்.

இறுதி நேரத்தில் இப்படி செய்தால் தான் தாம் பரப்பும் பொய் கதைகளுக்கு எதிராக சிறீதரன் மறுப்பு வெளியிட்டாலும் அது மக்களிடம் போய்ச்சேராது, மக்கள் குழப்பத்தில் சிறீதரனுக்கு வாக்களிக்காமல் விடுவார்கள் என்று சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

இதைவிட நான்கு கிழமைகளுக்கு முன் முழங்காவில் சென்றிருந்த சுமா தனது கைப்பிள்ளையாக செயற்படும் வேட்பாளர் பட்டியலில் உள்ள சட்டத்தரணி, அங்கு பிரபலமான ஒரு டிசைனரிடம் சென்று “சிறீதரன் பார் பொமிட் எடுத்த என்டு கதையை அடிச்சு விட்டுட்டம், ஆதாரம் ஒன்றும் வெளியிடவில்லை என்றால் சனம் எங்களில் முழுமையாக நம்பிக்கை இழந்துபோய்விடும்.

அதனால் சிறீயருக்கு எதிராக மதுவரி திணைக்களத்தின் கடித தலைப்பில் ஒரு போலி ஆவணம் தயாரித்து வெளியிட வேண்டும். அப்படியானால் சிறீயரை தோற்கடிக்கலாம்” என்று கூறி ஒரு போலி ஆவணம் செய்துதரும்படி கேட்டிருக்கிறார்.

தாம் வெற்றி பெறவேண்டும் என்பதை விட சிறீதரனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று சுமா தரப்பு கடுமையான திட்டங்களை வகுத்துள்ளதாக அவர்களின் நெருங்கிய வட்டாரங்களின் மூலம் தெரியவருகிறது.

சுமாவின் தோல்வி உறுதியாகியுள்ள நிலையில் புதிய திட்டமிடலை ச.குமாரும், சுமாவும் செயற்படுத்துவதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments