Tuesday, January 28, 2025
HomeMain NewsSri Lankaஅநுரகுமாரவால் டிரம்புடன் இலகுவாக பணியாற்ற முடியும்: சரத் அமுனுகம

அநுரகுமாரவால் டிரம்புடன் இலகுவாக பணியாற்ற முடியும்: சரத் அமுனுகம

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்புடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுக்கு இலகுவாக பணியாற்ற முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

”டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவானதன் மூலம் ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஈரான், பலஸ்தீன, லெபனான் யுத்தங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிதி வீண் விரயமாவதால் இந்த யுத்தங்களுக்கு செல்லும் அமெரிக்க நிதியை டிரம்ப் நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை மீண்டும் உலகின் பலமான நாடாக மாற்றுவதற்கு இவ்வாறு வீண் விரயமாகும் நிதிகள் நிறுத்தப்படும் என டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதேவேளை, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வானகங்களின் விலைகள் 600 மடங்குவரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொருட்களுக்கான வரி விதிப்புகளும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஜனநாயக கட்சியின் ஆட்சியில் அமெரிக்காவில் சீன முதலீடுகள் அதிகரித்திருந்தன. இவை அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பாக அமைந்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார். சீனா முதலீடுகள் நிறுத்தப்பட்டு சீன பொருட்களுக்கு வரிகள் அதிகரிப்பட்டால் அந்த பயன்களை இலங்கையை போன்ற நாடுகளால் அடைய முடியும். சீனாவின் முதலீடுகள் இலங்கை போன்ற நாடுகளை நோக்கி நகரும் போது அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

டிரம்புடன் அநுரகுமார திஸாநாயக்கவால் இலகுவாக பணியாற்ற முடியும். காரணம் புடின், கிம் ஜான் உன் உடன் பணியாற்ற முடியும் என டிரம்ப் கூறியுள்ளார். புடின் எனது நண்பர் எனக் கூறியுள்ளார். அதனால் அநுரவுடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது.

ஒபாமா மற்றும் பைடனின் ஆட்சியில் ஐ.நாவில் மனித உரிமைகள் தொடர்பில் பல அழுத்தங்கள் இருந்தன. குறிப்பாக அமெரிக்காதான் உலக மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறினர். டிரம்ப் இந்த விடயத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments