சீமான் ஒரு காலாவதியான அரசியல்வாதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் காலியாகவுள்ள 2553 மருத்துவர் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவித்து,
ஓராண்டு ஆகியும் ஒரு மருத்துவர்கள்கூட நியமனம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டிலுள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தற்போது மதுரை, விருதுநகர், தேனி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, உட்பட 14 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில்,
முதல்வர் பணியிடமும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என்று சீமான் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என மருத்துவ கட்டமைப்பு உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் மருத்துவத்துறையில் 18,460 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. இன்னும் 2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்துக்கொண்டு இருக்கிறது.
மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்பவில்லை எனும் சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். அண்மையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவமனை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சியைச் சேர்ந்த சீமான் இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக்கொண்டிருந்தவர்கள், காலாவதியான அரசியல்வாதியாக மாறி உள்ளனர். என்று தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவத்துறை 41 மாதங்களாக சீரழிந்துள்ளதாகவும்,
டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அவர், சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? சுகாதாரத்துறை மீது எடப்பாடி பழனிசாமி களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று கூறினார்.