Thursday, May 22, 2025
HomeMain NewsSri Lankaஉரிமையாளரற்ற வாகனங்கள்: விசாரணைகள் துரிதம்!

உரிமையாளரற்ற வாகனங்கள்: விசாரணைகள் துரிதம்!

உரிமையாளர்கள் அற்ற 18 வாகனங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

குறித்த வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராயும் சந்தர்ப்பத்தில் தகவல்கள் உண்மை என அறியக்கிடைத்துள்ளன.

இந்த வாகனங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் நாட்களில் தேவைக்கேற்ப ஏனைய அனைத்து திணைக்களங்களினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments