இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக காலி மாவட்டத்தில் 903,163 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காலி தேர்தல் தொகுதியில் 42,241 தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக காலி மாவட்டத்தில் 867,709 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் 35, 454 வாக்காளர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாவட்டத்திற்கான ஆசனங்களின் எண்ணிக்கை 09 ஆகும்.
அதிகளவு வாக்காளர்கள் அக்மீமன தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 109,571 ஆகும். ஹினிதும தேர்தல் தொகுதியிலும் 108,129 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்தளவு வாக்காளர்கள் பலபிட்டிய தொகுதியில் பதிவாகியுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 57,217 ஆகும்.
ஏனைய ஆசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கைகள் முறையே,
அம்பலாங்கொடை – 83,971
கரந்தெனிய – 80,658
பெந்தர எல்பிட்டிய – 96,971
பத்தேகம – 105,232
ரத்கம – 84,855
காலி – 87,542
ஹபராதுவ – 89,011