மத்திய ஆபிரிக்க நாடான சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை லேக் சாட் பிராந்தியத்தில் இராணுவ வீரர்கள் 17 பேரை ஹராம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இராணுவத்தினர் பயங்கரவாதிகள் 96 பேரை சுட்டு வீழ்த்தியதாக இராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இம் மோதலில் 17 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் போகோ ஹராம் பயங்கரவாத இயக்கத்தின் நிலைகள் அழிந்தன.
ஆனால், அண்மைக் காலமாக ஹராம், ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
அதேசமயம் கடந்த மாதம் இப் பயங்கரவாத அமைப்புக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இப் பயங்கரவாத அமைப்பானது, இஸ்லாமிய சட்டத்தை நிறுவும் நோக்கத்துடன் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.