Tuesday, January 28, 2025
HomeCinemaபேய் கனவால் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்!

பேய் கனவால் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்!

தமிழில் ‘அழகிய தீயே’ படத்தில் அறிமுகமான நவ்யா நாயர் தொடர்ந்து ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு பேய் கனவுகள் வந்து தூக்கத்தை கெடுப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நவ்யா நாயர் தெரிவிக்கையில்,

நான் சிறுவயதில் இருந்தே பயமுறுத்தும் மோசமான பேய் கனவுகள் கண்டு வருகிறேன். இவை எனது நிம்மதியான தூக்கத்தை கெடுக்கின்றன. சில நேரங்களில் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்திருப்பேன். மீண்டும் தூங்க முயற்சித்தாலும் அதே கனவுகள் வரும். சில நேரம் நள்ளிரவு 2 மணிக்கு கனவு கண்டு விழிப்பு வரும். அதன்பிறகு தூங்க பயமாக இருக்கும்.

பொதுவாக கனவில் என்னை சுற்றி பாறைகளும், மணலும் இருக்கும். ஒரு கற்பனை உலகில் நான் சிக்கி இருப்பேன். சுற்றி கருப்பு நிறத்தில் ஒரு விசித்திரமான உயிரினம் இருக்கும். அதன் வாயை திறந்தால் முக்கோண பற்கள் தெரியும். அது பார்க்க பேய் போலவே இருக்கும். அதை கனவில் பார்த்து மிகவும் பயந்து போவேன் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments