இந்தியாவின் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சுப்புராய வீதியைச் சேர்ந்த பிரசாத் என்பவர் கப்பல் பொறியியலாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
இவருக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் நாளை புதன்கிழமை திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவு அருந்திவிட்டு தனது அறைக்கு உறங்கச் சென்றுள்ளார் பிரசாத்.
ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் பிரசாத்தின் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், அவரது தந்தை அறைக்குச் சென்றுள்ளார்.
அப்போதுதான் பிரசாத் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூற்று ஆய்வுக்காக கடலூர் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகனின் இத் திடீர் மரணத்துக்கான காரணம் குறித்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.