Sunday, May 25, 2025
HomeMain NewsMiddle Eastதுருக்கி விமான நிலையத்தில் பரபரப்பு ; திடீரென தீப்பிடித்த ரஷிய விமானம்

துருக்கி விமான நிலையத்தில் பரபரப்பு ; திடீரென தீப்பிடித்த ரஷிய விமானம்

ரஷிய விமானமொன்று துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த விமானத்தில் 95 பேருடன் அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்துள்ளது.

இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அஜிமுத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சோச்சியில் இருந்து 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் விமானி அவசர அழைப்பு கொடுக்க விமான நிலைய மீட்புக்குழு, தீயணைப்புப்படை வீரர்கள் விரைவாக வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கப்டவில்லை.

இந்த விபத்து தொடர்ந்து ஓடுபாதையில் இருந்து விமானத்தை அப்புறுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதுவரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments