Friday, May 23, 2025
HomeCinemaBigg Boss: ஒரு ஷாப்பிங் செய்ய எவ்வளவு பிரச்சனை? பிக் பாஸின் அடுத்த ப்ரொமோ

Bigg Boss: ஒரு ஷாப்பிங் செய்ய எவ்வளவு பிரச்சனை? பிக் பாஸின் அடுத்த ப்ரொமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான காய்கறி, பலசரக்கு பொருட்களை பெறுவதற்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பித்தது. நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இதுவரை ஆறு பேர் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை ஓரளவிற்கு பிரச்சனை இல்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் வாங்கியுள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

ஆம் கடந்த முறை பெண்கள் ஷாப்பிங் செய்த போது, சாச்சனா தவறு செய்ததால் பொருட்கள் கிடைக்காமல் திணறியுள்ளனர். இந்த முறை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அமர்ந்து ஷாப்பிங் செய்துள்ளனர்.

ஆனாலும் சில வாக்குவாதங்களும் எழுப்பியது. எது எப்படியோ இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படாமல் இருப்பார்கள் என்று இந்த ப்ரொமோ காட்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments