சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் வார இறுதியில் நடந்து வந்த சிக்னல் தொடர்பிலான பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெனீவாவிலுள்ள Cornavin ரயில் நிலையத்தில் சிக்னல் தொடர்பில் பெரிய பணி ஒன்று வார இறுதியில் நடைபெற்றதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
பயணிகளை அவர்கள் சென்று சேரவேண்டிய இடங்களுக்கு அல்லது அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து அந்த சிக்னல் அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்த நிலையில், பணிகள் முடிந்து இன்று காலை முதல் மீண்டும் ரயில்கள் வழக்கம்போல இயங்கத் துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், வழக்கமாக ரயிலில் பயணிக்கும் மக்கள், சில பிளாட்பார எண்கள் மாற்றப்பட்டுள்ளதால் தங்கள் ரயில்களை தேடி அலையும் ஒரு நிலை ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை!