Wednesday, April 16, 2025
HomeGossipsநாகார்ஜூனா வீட்டில் இன்னொரு திருமணம்.. அகில் நிச்சயதார்த்தம் முடித்தது! பெண் யார் பாருங்க

நாகார்ஜூனா வீட்டில் இன்னொரு திருமணம்.. அகில் நிச்சயதார்த்தம் முடித்தது! பெண் யார் பாருங்க

நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, நடிகை சோபிதா துளிபாலா உடன் காதலில் இருக்கிறார். அவர்கள் நிச்சயதார்த்தத்தை சில மாதங்கள் முன்பு நாகார்ஜூனா நடத்தி வைத்தார்.

அவர்கள் திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. நாக சைதன்யா இரண்டாம் திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் நாகார்ஜூனா மற்றும் அமலா ஜோடியின் மகனான அகில் அக்கினேனி திருமணமும் தற்போது நிச்சயம் ஆகி இருக்கிறது.

அவர் Zainab Ravdjee என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். லண்டனை சேர்ந்த Zainab Ravdjee ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்ஜூனா வீட்டில் இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் இன்று நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது. அடுத்த வருடம் அவர்கள் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments