Saturday, May 3, 2025
HomeSportsஇந்திய அணியிடம் படுதோல்வி: இது எங்களுக்கு எச்சரிக்கை - அவுஸ்திரேலிய கேப்டன்

இந்திய அணியிடம் படுதோல்வி: இது எங்களுக்கு எச்சரிக்கை – அவுஸ்திரேலிய கேப்டன்

அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் இந்திய அணியுடனான தோல்வி குறித்து பேசியுள்ளார்.

பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இது அவுஸ்திரேலிய அணியின் மோசமான தோல்விகளில் ஒன்றாகும். அதேபோல் இந்திய அணியின் சாதனை வெற்றிகளில் ஒன்றாகவும் பதிவானது.

இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins),

“உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும்போது நாங்கள் மிகச் சிறப்பாக தயாராக இருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால், இதுபோன்ற தோல்வி நாங்கள் இன்னும் நிறைய விடயங்களை சரி செய்ய வேண்டும் என்று எங்களை எச்சரித்துள்ளது.

எனினும் நிச்சயம் அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாங்கள் சிறப்பாக தயாராவோம் என்று நினைக்கிறேன். இந்தப் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தை விட இரண்டாம் நாள் ஆட்டத்தில் பெருமளவு வித்தியாசம் இருந்தது. நாங்கள் இன்னும் வலைப்பயிற்சியில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments