Wednesday, April 16, 2025
HomeGossipsபிரபல நடிகையை கேள்வி கேட்டு கடுப்பேற்றிய பேட்டியாளர்...!

பிரபல நடிகையை கேள்வி கேட்டு கடுப்பேற்றிய பேட்டியாளர்…!

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ரிஹானா, யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தும் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார். அந்தவகையில் நடிகை நேத்ரா ஸ்ரீ என்பவரை பேட்டி எடுத்துள்ளார் ரிஹானா.

பேட்டிக்கு நேத்ரா ஸ்ரீ தாமதமாக வந்ததால் கோபப்பட்ட ரிஹானா, அவரை சரமாறியாக கேள்விகளை கேட்டு கடுப்பேற்றியிருக்கிறார்.

நடிகையாக இருந்து கொண்டு சொன்ன நேரத்திற்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன நடிகை என்று ரிஹானா கேட்க, அதற்கு நேத்ரா ஸ்ரீ, தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தாமதமாகிவிட்டதாகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் கூறிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் ரிஹானா தொடர்ந்து அதையே கேட்டதால் கடுப்பாகிய நேத்ரா, எனக்கு வேண்டாம் நான் பேட்டி கொடுக்கவில்லை என்று எழுந்து செல்ல முயற்சி செய்தார். இதனால் ரிஹானா முகம் மாற, இது பிராங்க் என்று நேத்ரா கூறி ரிஹானாவுக்கு ஷாக் கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய நேத்ரா ஸ்ரீ-யிடம் டிராபிக் ராமசாமி படத்தில் விவகாரமான காட்சியில் நடித்தது குறித்து கேள்வி கேட்டார் ரிஹானா. அந்த படத்தில் இப்படியொரு காட்சி இருக்கும் என்று முன்பே எனக்கு சொல்லவில்லை என்றும் அந்த படத்தில் இரு காட்சிகள் நடித்தப்பின் தான் அந்த முத்தக்காட்சி நடிக்க சொன்னதாகவும் கூறினார்.

அப்போது நான் முடியாது என்று சொல்லியிருந்தால் அந்த ஷூட்டிங் நின்று இருக்கும், இதனால் தான் அந்த காட்சியில் நடித்தேன், நீங்களே அப்படியொரு சூழலில் இருந்தால் அதைத்தான் செய்து இருப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments