பெங்கல் புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் தயார் நிலை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர்களுக்கான தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர விமர்சித்துள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தாமதமான நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அரசாங்கம் என்ற வகையில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்ட வேண்டும். இராணுவம் மிகவும் சிறப்பாக சேவையாற்றியுள்ளது.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் இன்னும் சென்றடையவில்லை , ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உதவி தேவைப்படும் அவலநிலையில் உள்ளனர்” என்றார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன்னுரிமையளிக்குமாறு விஜேசுந்தர அரசாங்கத்தை வலியுறுத்தினார்.