நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
21 மாவட்டங்களின் 175 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,3052 குடும்பங்களைச் சேர்ந்த 37,7511 பேர் சீரற்ற காலநிலையினால் இன்று (28) காலை வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
91 வீடுகள் முழுமையாகவும் 1,662வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
311பாதுகாப்பான இடங்களில் 10431 குடும்பங்களைச் சேர்ந்த 32695 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட தரவுகளின் அடிப்படையில், அதிகமாக யாழ்ப்பாணம், களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் அம்பாறை மாவட்டங்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.