Wednesday, December 4, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsAmericaஹமாசுக்கு கெடு விதித்த டொனால்டு டிரம்ப்

ஹமாசுக்கு கெடு விதித்த டொனால்டு டிரம்ப்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணய கைதிகளாக உள்ளவர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் அடக்கம். பணய கைதிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. அதேவேளை, தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுமையாக அழித்து, பணய கைதிகளை மீட்கும்வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் நரக விலை கொடுக்க நேரிடும் என்று ஹமாசுக்கு டொனால்டு டிரம்ப் கெடு விதித்துளார்.

தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.

ஜனாதிபதியாக தான் பதவியேற்கும் தினத்திற்கு முன்பு பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவேண்டும், அவ்வாறு பணய கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘நான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜனவரி 20ம் தேதிக்கு முன்பு பணய கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் அதற்கு காரணமானவர்கள் (ஹமாஸ் ஆயுதக்குழு) மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments