பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு கோரி இஸ்லாமாபாத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 96 பேருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இம்ரான் கான், அவரது மனைவி, கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் உள்ளிட்ட 96 பேருக்கு எதிராகவே பிணையில் விடுவிக்க முடியாத வகையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையில் 12 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.